dinamalar telegram
Advertisement

சித்துவுக்கு முதல்வர் ஆசை பா.ஜ., குற்றச்சாட்டு

Share

பெங்களூரு : ''இது தான் தனது இறுதி தேர்தல் என, பலமுறை கூறிக்கொண்டே வந்த சித்தராமையா, முதல்வராகும் ஆசையை இன்னும் விடவில்லை,'' என பா.ஜ., தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, டுவிட்டரில் பா.ஜ., நேற்று கூறியதாவது:செல்லும் இடங்களில், ஆதரவாளர்களை டீ குடிக்க வைத்து, 'சித்தராமையா அடுத்த முதல்வர்' என, கோஷம் போட வைத்த சித்தராமையா, தற்போது மற்றொரு தந்திரத்தை பிரயோகித்துள்ளார்.



இப்போதே தன்னை அடுத்த முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்படி, சித்தராமையா கோஷ்டி காங்., மேலிடத்துக்கு, நெருக்கடி கொடுக்கிறது. சிவகுமார் கணக்கிலேயே இல்லையா.இதுதான் தன் கடைசி தேர்தல் என, பல ஆண்டுகளாக கூறிக்கொண்டே வந்த சித்தராமையா, முதல்வர் ஆசையை இன்னும் விடவில்லை.சிவகுமாரின் ஆசையை, தண்ணீர் ஊற்றி அணைக்கும் வேலையை, சித்தராமையா கோஷ்டி செய்கிறது. குலுக்கல் முறையில் முதல்வர் வேட்பாளரை காங்., மேலிடம் முடிவு செய்யுமா.முன்னாள் எம்.பி., ரம்யா உட்பட காங்கிரசின் பல தலைவர்கள், சிவகுமாரின் நடவடிக்கையை விமர்சித்து, எம்.பி.பாட்டீலுக்கு ஆதரவாக நின்றனர்.



ஆனால் எம்.பி.பாட்டீல், சித்தராமையாவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும்படி நெருக்கடி கொடுக்கிறார்.கூட்டு தலைமையில், தேர்தல் என்ற அறிவிப்புடன், சிவகுமார் நடத்திய போராட்டம், மேகதாது பாதயாத்திரை, மாட்டு வண்டி ஊர்வலம் நடத்தினார். ஆனால் இவரை ஓரம் கட்டி, தானே முதல்வர் வேட்பாளர் என கூறிக்கொண்டு, கட்சிக்குள் செல்வாக்கை வளர்க்கிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement