dinamalar telegram
Advertisement

உஷார்: அலைபேசியில் குறுஞ்செய்தி மூலம் மோசடி: விழிப்புணர்வு இருந்தும் ஏமாறும் அப்பாவிகள்

Share
Tamil News
நத்தம் : அலைபேசிக்கு பரிசு பெட்டகம்,போனஸ் கிடைத்துள்ளதாக ஆசையை துாண்டி குறுஞ்செய்தி அனுப்பி நுாதன முறையில் வங்கி கணக்கிலிருந்து பண மோசடி செய்யும் கும்பல் அதிகரிப்பதால், விழிப்புணர்வுடன் இருந்தாலும் சில நேரங்களில் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழப்பதும் தொடர்கிறது.

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் வியாபாரம், வங்கிக்கடன் என அனைத்திலும் பணம் கையில் புழங்குவதை காட்டிலும் இணையவழி பணம் பரிமாற்றம் அதிகமாகி வருகிறது.அதற்கேற்றார் போல் பல நிறுவனங்களும் க்யூ ஆர் கோடு செயலிகள் என பல்வேறு வகைகளில் பணம் பரிமாற்றம் செய்ய அலைபேசி செயலிகளை உருவாக்கி வருகின்றன.பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது போன் பீ, கூகுள் பே, பே டிஎம் போன்ற செயலிகள் தான். தற்போது இதன் வாயிலாகவும் மோசடி நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது.

அலைபேசியில் குறுஞ்செய்தி, இணைய லிங்க் வருவதும் அதில் உங்களுக்கு பரிசு கிடைத்துள்ளது, பண பரிவர்த்தனை செய்ததற்காக கூடுதல் போனஸ் தொகை கிடைத்துள்ளது என குறிப்பிபடபடுகிறது.

யோசிக்காமல் அந்த லிங்கை தொட்டவுடன் நேரடியாக இணையத்துக்குள் செல்கிறது.அங்கு ஒரு பரிசு பெட்டகம் போல் உள்ள ஒன்றை ஸ்கிராட்ச் செய்யச் சொல்கிறது. பின்னர் உங்களுக்கு 2000 முதல் 5000 வரை பரிசுதொகை கிடைத்துள்ளதாக தகவல் வருகிறது. அதனைக் கிளிக் செய்தால் நேரடியாக போன் பே செயலிக்குள் செல்கிறது. கடவுச்சொல்லை பதிவு செய்தால் வங்கிக் கணக்கில் இருந்து பணம் டெபிட் ஆகிவிடுகிறது.இதுதொடர்பாக போதிய விழிப்புணர்வுகள் வழங்கினாலும் பலரும் ஏமாந்து நவீன மோசடியால் பாதிக்கின்றனர்.

வெளியே தெரிந்தால் அவமானம் என கருதி போலீசில் புகார் கூறாமல் மறைத்து விடுகின்றனர் இது மோசடி கும்பலுக்கு சாதகமாக மேலும் மோசடியில் ஈடுபடுகின்றனர். பதிக்கும் பலருக்கு இது தொடர்பாக எங்கு புகார் தெரிவிப்பது என்பதே தெரியாமல் உள்ளனர். பணப்பரிவர்த்தனை விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க சைபர் கிரைம் போலீசார் நகர், கிராமங்களில் இது தொடர்பான விழிப்புணர்வை அதிகாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓ.டி.பி., எண்ணை பகிராதீங்க

அலைபேசிக்கு வரும் லிங்க் ,தேவையற்ற குறுஞ்செய்திகள் வந்தால் அதைத் திறக்க கூடாது . வங்கி சம்பந்தமான ஓ.டி.பி., எண்களை யாருக்கும் பகிர கூடாது. அலைபேசியில் லோன் அப்ளிகேஷன் பல வருகிறது. அதில் அதிகளவில் மோசடிகள் நடக்கிறது. அவற்றை தவிர்ப்பது நல்லது.


ஆன்லைன் பண மோசடி நடந்தால் 1930 என்ற சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் டவர் அமைக்க இடம் வேண்டும் என்ற குறுஞ்செய்தி, ஆன்லைன் ஜாப் ,ஆன்லைன் பர்ச்சேஸ் போன்ற விஷயங்களை தவிர்க்கலாம்.இதில் மிகவும் கவனமாக விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. ஏ.ரேணுகா தேவி, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர், திண்டுக்கல்.

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (9)

 • spr - chennai,இந்தியா

  இது தொடர்பாக அரசு செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று இப்படி ஏமாற்றப்பட்டவர்கள் பெரும்பாலும் விடியற்காலையில் செய்வதால் உடனடியாக வங்கியையோ அல்லது அலைபேசி அமைப்பாளர்களையோ தொடர்பு கொண்டு பணப்பட்டுவாடாவை நிறுத்த முடியவில்லை இப்படியொரு நிகழ்வில் அலைபேசி நிறுவனத்திடம் குற்றம் நடந்ததைப் பதியாதவகையில் காவற்துறையும் நம் புகார்களை ஏற்பதில்லை அலைபேசி செயலிகளும் தேவையில்லாமல் நம் கைபேசியின் அடிப்படை என் குறியீட்டைக் கேட்பது அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளது அவை பொத்தாம் பொதுவாக உங்கள் கைபேசியின் அனைத்து செயல்களையும் நாங்கள் கண்காணிப்போம் எவரிடமும் உங்களை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வோம் என்றெல்லாம் சொல்வதன் காரணம் புரியவில்லை அவை அவசியமா எனவும் தெரியவில்லை மத்திய அரசு முரட்டுத்தனமாக அனைத்துப் பணப்பரிவர்த்தனைகளும் கைபேசி மூலமாகவே நடத்தப்பட வேண்டுமெனச் சொல்லும் நிலையில் நுகர்வோர் பாதுகாப்பு முறையாக இல்லை இது போன்ற இழப்புக்களை மத்திய அரசே ஈடுகட்ட வேண்டும்

 • அப்புசாமி -

  எவனோ ஒருத்தன் அனாமத்தா 5000, 10000 பரிசாத்தரேன்னு குறுஞ்செய்தி அனுப்புனா, வாயைப் பொளந்துக்கிட்டு, பான் கார்டு, ஆதார் கார்டு, பேங்க் அக்கவுண்ட் நம்பரோட கடவுச்சொல்லையும் பறிமாரிக்கொள்கிற விழிப்புணர்வோட மக்கள் இருக்காங்க. நாம ரொம்ப சந்தோஷப்படணும்

  • Davamani Arumuga Gounder - Namakkal

   மாதா மாதம் ரூ. 1000/- தருகிறோம் என்று கூறி, நம் தமிழகத்தின் 5 வருட முன்னேற்றத்தையும் பிடுங்கிக் கொண்டு, 5 வருடங்களுக்குள் தமிழக மக்களின் பல்லாயிரம் கோடு ரூபாய் பணத்தையும் பிடுங்க எத்தனிக்கிறார்கள்.. அது போலவே இதுவும்.. ஆனால் ... 5,000/- 10,000/-

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  பாணி பூரி விக்கிறவன் ஏமாறுவதில்லை ......

 • R S BALA - CHENNAI,இந்தியா

  எல்லாம் ஆசைதான் காரணம் அதுவும் பேராசை...அது பெரும் நட்டத்தில் முடிகிறது.. மற்றபடி விழிப்புணர்வுக்கும் இவ்வாறான நிகழ்வுகளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை..

  • Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா

   .. தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு .. மாதா மாதம் ரூ. 1000/- கிடைத்துள்ளதைப் போலவே.. ஆனால் அதற்கும், இதற்கும் சம்மந்தமில்லை..

 • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

  மோசடி குறுஞ்செய்தி அனுப்புபவர்களை நல்லா செக் பண்ணுங்க. கண்டிப்பா கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுகவின் தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை உடன்பிறப்புகளாகவோ, அல்லக்கைகளாகவோ இருப்பார்கள். ஏன்னா, அவனுங்கதான் விஞ்ஞான முறையில் எங்குமே நிரூபிக்கமுடியாதபடி ஆட்டையை போடுவதில் வல்லவர்கள்.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்