25 கிலோ கஞ்சா பறிமுதல்; துரைப்பாக்கத்தில் 8 பேர் கைது
சென்னை : சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். 24.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.துரைப்பாக்கம், 200 அடி சாலை சுங்கச்சாவடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அப்பகுதியை தொடர்ந்து கண்காணித்து வந்து வந்தனர்.இந்நிலையில், கஞ்சா விற்பனை செய்த ஐந்து நபர்கள் கையும் களவுமாக சிக்கினர். அவர்களிடம் இருந்து 14.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சந்தன்தாஸ், 31, சுமன் தேப் நாத், 23, அபுல் காசிம், 36.சுதீப் தேப் நாத், 30, ரபீந்திரா தேப் நாத், 34, ஆகியோர் என்பது தெரிய வந்தது. ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.அதேபோல், வேளச்சேரி, நேரு நகர் மதியழகன் தெருவில் கஞ்சா விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது.அங்கு விரைந்த போலீசார், வடமாநில நபர்கள் தங்கியுள்ள வீட்டை சோதனையிட்டனர். இதில், 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில், திரபுரா மாநிலத்தைச் சேர்ந்த மசுக்மியா, 24, ஜாஹிர் உசேன், 23, அன்வர் உசேன், 24, ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.அவர்களை வேளச்சேரி போலீசார் கைது செய்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!