வீரராகவர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்
திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவர் கோவில், சித்திரை பிரம்மோற்சவத்தின், 9வது நாளான நேற்று, தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில், சித்திரை பிரமோற்சவ விழா, கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில் உற்சவர் வீரராகவ பெருமாள், நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில், வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது.பிரம்மோற்சவத்தின் 9வது நாளான, நேற்று காலை, தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், உற்சவர் வீரராகவப் பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வார், கோவில் குளத்தில் நீராடு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஏராளமான பக்தர்களும், தீர்த்தவாரி நிகழ்ச்சியில் புனித நீராடினர். இரவு, விஜயகோடி விமானம் மற்றும் ரத்னாங்கி சேவையில், உற்சவர் வீரராகவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!