டாஸ்மாக் ஊழியருக்கு எம்.எல்.ஏ., அறிவுரை
திருவாலங்காடு : சின்னம்மாபேட்டை 'டாஸ்மாக்'கில் குவார்ட்டருக்கு கூடுதலாக வசூலித்த டாஸ்மாக் ஊழியருக்கு திருவள்ளூர் எம்.எல்.ஏ., அறிவுரை வழங்கினார்.திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில், பாசன கால்வாய் துார்வாரும் பணியை பார்வையிட ஊராட்சி சார்பில், திருவள்ளூர் எம்.எல்.ஏ.,வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதை ஏற்று பணியை பார்வையிட வந்த எம்.எல்.ஏ., ராஜேந்திரனிடம், அருகில் உள்ள 'டாஸ்மாக்'கில் குவார்ட்டருக்கு, 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக, சில 'குடி'மகன்கள் கூறினர்.இதை தாங்கள் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, 'டாஸ்மாக்'கில் ஆய்வு செய்த எம்.எல்.ஏ., கூடுதல் வசூல் செய்தபோது, ஊழியரை கையும் களவுமாக பிடித்து அறிவுரை வழங்கினார்.இனி இதுபோன்று செயலில் ஈடுபட்டால் துறை ரீதியில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவேன். மேலும், மாவட்ட 'டாஸ்மாக்' மேற்பார்வையாளரிடம், இதுகுறித்து கண்காணிக்கும்படி அறிவுறித்தினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!