கம்பமெட்டில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க கோரிக்கை
கம்பம்,- -கம்பமெட்டில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க ஏலத்தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு செல்ல குமுளி, கம்பமெட்டு, போடிமெட்டு ரோடுகள் உள்ளன. குமுளியில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதேபோன்று கம்பமெட்டிலும் தமிழக பயணிகள் வசதியை கருதி பஸ் ஸ்டாண்ட் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஏலத்தோட்டங்களுக்கு விவசாயிகள், தொழிலாளர்களும் செல்கின்றனர்.அதேபோன்று இடுக்கி, கட்டப்பனை, மூணாறு, தொடுபுழா செல்பவர்களும் கம்பமெட்டு வழியாக செல்கின்றனர். ஆனால் கம்பமெட்டில் நிற்க கூட இடம் இல்லை. வெயில், மழையில் நனைந்து கொண்டே நிற்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட் அல்லது குறைந்தபட்சம் காத்திருப்பு அறை கட்ட நடவடிக்கை எடுக்க ஏலத்தோட்ட தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!