சீதோஷ்ண நிலையில் மாற்றம் நோய் தடுக்க ஆலோசனை
கம்பம், --சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் நோய்கள் வராமல் காக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சித்தா டாக்டர் சிராஜ்தீன் ஆலோசனை வழங்கியுள்ளார். ஒரு மாதத்திற்கும் மேலாக கடும் வெப்பம் நிலவியது. திடீரென உருவான புயலால் சீதோஷ்ண நிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை உள்ளது. இதனால் ஏற்படும் மாற்றங்கள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து சித்தா டாக்டர் சிராசுதீன் கூறிவதாவது :வெப்பம் தணிந்து சீதோஷ்ண நிலை மாறி உள்ளது. இதனால், உடல் வெப்பநிலையிலிருந்து குளிர்ந்த நிலைக்கு மாறும் போது சின்னம்மை போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது. வாய்ப்புண் ஏற்படுவதை தவிர்க்க புளிப்பு, கார உணவுகளை தவிர்க்க வேண்டும். இனிப்பு வகை, பழங்கள் உண்ணலாம். வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் செய்வது நல்லது என்றார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!