ஓணப்பண்டிகையை குறி வைத்து காய்கறி சாகுபடி துவக்கம்
மூணாறு,--மூணாறு அருகே வட்ட வடை ஊராட்சியில் ஓணப் பண்டிகை விற்பனையை குறி வைத்து காய்கறி சாகுபடியை விவசாயிகள் துவக்கினர்.
வட்டவடை ஊராட்சியில் காய்கறி சாகுபடி முக்கிய தொழில். அங்கு 1500 ஏக்கரில் உருளை கிழங்கு, காரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர், பல்வேறு வகை பீன்ஸ், பட்டாணி,பூண்டு, கீரை வகைகள் உள்பட பல்வேறு காய்கறிகள் ஆண்டில் முப்போகம் சாகுபடி செய்யப்படும். ஆனால் தண்ணீர் பற்றாக்குறையால் இரண்டு போகம் சாகுபடி முழுமையாக நடப்பதில்லை. தென்மேற்கு பருவ மழையின்போது ஓணப் பண்டிகை விற்பனையை குறிவைத்து சாகுபடி முழுமையாக நடக்கும். அதன்படி தற்போது நிலங்களை சீர் செய்து உருளைகிழங்கு, காரட், முட்டைகோஸ், பீன்ஸ் வகைகள் ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் முடங்கிய விற்பனை இந்தாண்டு கை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!