ஆற்றில் சடலம்: அடையாளம் தெரிந்தது
மூணாறு,---மூணாறில் முதிரைபுழை ஆற்றில் நேற்று முன்தினம் சடலமாக கிடந்தவர் கொல்லம் பத்னாபுரம் மீன்குளத்தைச் சேர்ந்த மனோஜ் 39, என அடையாளம் தெரிந்தது.இடுக்கி மாவட்டம் கஞ்சிகுழியில் ரப்பர் தோட்டத்தில் வேலை செய்து வந்தவர் மே 9ல் உறவினர்களுடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். அனைவரும் காலனி பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கினர். இரவில் அறையை விட்டு வெளியேறிய மனோஜ் திரும்பவில்லை. இதுபோன்ற செயலில் அடிக்கடி ஈடுபடுபவர் என்பதால் உறவினர்கள் தேடவும், போலீசில் புகார் அளிக்கவும் இல்லை. அவர் ஆற்றில் சடலமாக கிடந்தவரின் போட்டோ வாட்ஸ் ஆப்களில் பரவியது. இதன் மூலம் உறவினர்கள் அடையாளம் கண்டனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!