பஸ் கண்ணாடி உடைத்த பயணி
பெரியகுளம்,--படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தவரை எச்சரித்த கண்டக்டரை அவதூறாகப் பேசி பஸ் கண்ணாடியை உடைத்தவரை போலீசார் தேடுகின்றனர்.பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தைச் சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் வெங்கடேசன் 50. இவர் வீரபாண்டி திருவிழா சிறப்பு பஸ்சில், பெரியகுளம் வரும்போது பயணி ஒருவர் படியில் தொங்கியவாறு பயணம் செய்தார். அவரை கண்டக்டர் வெங்கடேசன் இருக்கையில் உட்காருமாறு எச்சரித்தும் கேட்கவில்லை. லட்சுமிபுரம் பஸ் ஸ்டாப்பில் பஸ் நின்ற போது இறங்கிய பயணி கல்லை எடுத்து கண்டக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்து, பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பி ஓடினார். தென்கரை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!