முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கழக பாராட்டு கூட்டம்
மயிலம் : மயிலத்தில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.மயிலம் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன், பொருளாளர் கிருஷ்ணன், மாவட்ட அமைப்பு செயலாளர் கதிரவன் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் கிருஷ்ணன் வரவேற்றார்.தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மணிவாசகம் மற்றும் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
விழாவில், முன்னாள் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் ஜனசக்தி, மாநில பொருளாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட தலைவர் பிரபாகரன் விழுப்புரம் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயா உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!