dinamalar telegram
Advertisement

பெண்ணுக்கு கத்தி வெட்டு3 பேர் மீது வழக்குப்பதிவு

Share


திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணை கத்தியால் வெட்டிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சபரிசன் மனைவி இலக்கியா, 25; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி. இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.



கடந்த 11ம் தேதி காலை மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், சிவமூர்த்தி, காசியம்மாள், சுப்ராயலு ஆகிய மூன்று பேரும் சேர்ந்து இலக்கியாவை தாக்கியதுடன், அவரது மாமியார் முத்துலட்சுமியை, 55; கத்தியால் வெட்டினர்.இலக்கியா அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார், சிவமூர்த்தி, காசியம்மாள், சுப்ராயலு ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement