மகள் மாயம்: தந்தை புகார்
திருவெண்ணெய்நல்லுார் : மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். கடந்த 12ம் தேதி கல்லுாரிக்குச் சென்ற இவரது 19 வயது மகளைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.அய்யனார் அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!