மா.கம்யூ., செயற்குழு கூட்டம்
கடலுார் : கடலுாரில் மாவட்ட மா.கம்யூ., செயற்குழுக் கூட்டம் நடந்தது.மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், மருதவாணன், உதயகுமார், கருப்பையன் பேசினர்.என்.எல்.சி., நிறுவனத்திற்கு ஏற்கனவே நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, நிரந்தர வேலைவாய்ப்பு, மாற்று இடத்திற்கான பட்டா மற்றும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
மூன்றாவது சுரங்கத்திற்கு விவசாயிகளின் ஒப்புதல் இன்றி நிலத்தை கையகப்படுத்த கூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் கம்மாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இதில், மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பங்கேற்பதால் அனைத்து பகுதி விவசாயிகளும் திரளாக பங்கேற்க வேண்டும் என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!