மினி லாரி - வேன் மோதல் விருதையில் 15 பேர் காயம்
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மினி லாரி மீது டூரிஸ்ட் வேன் மோதியதில், 15 பேர் காயமடைந்தனர்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலத்துாரைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா, 56. இவர் நேற்று தனது குடும்பத்தினருடன், டூரிஸ்ட் வேனில் (டி.என்.37 சி.எக்ஸ்.3832) , நாகூர் தர்க்காவிற்கு சென்றுவிட்டு, திருப்பத்துார் சென்று கொண்டிருந்தார்.
மாலை 4:00 மணியளவில், கம்மாபுரம் - விருத்தாசலம் சாலை, கார்குடல் அருகே வேன் வந்தபோது, முன்னால் சென்ற மினி லாரி (டி.என்.91 - 0605) டிரைவர் திடீரென பிரேக் அடித்ததால், எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறம், டூரிஸ்ட் வேன் மோதியது.இதில், வேனில் இருந்த சாதிக் பாஷா மற்றும் அவரது குடும்பத்தினர் 15 பேர் லேசான காயமடைந்தனர். தகலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார், அவர்களை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!