நகராட்சியில் திருமணம் பதிவு செய்ய மறுப்பது ஏன்? தெளிவுபடுத்த நாஜிம் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
காரைக்கால் : காரைக்கால் நகராட்சியில் திருமணம் பதிவு செய்ய மறுப்பதற்கான காரணம் குறித்து மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என்று நாஜிம் எம்.எல்.ஏ., வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:காரைக்கால் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பிறப்பு, இறப்பு, திருமணம் உள்ளிட்ட சான்றிதழ்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நகராட்சி அலுவலகத்தில் திருமணம் பதிவு செய்யப்படுவது வழக்கம். இந்திய முறை திருமணமாக இருந்தாலும், பிரெஞ்சு முறை திருமணம் என்றாலும் பதிவு செய்யப்பட்டு வந்ததுஆனால் கடந்த சில நாட்களாக காரைக்கால் நகராட்சியில் எந்தவொரு திருமணத்தையும் பதிவு செய்ய மாட்டோம் என தெரிவித்து வருகின்றனர்.
இதனால் திருமணம் பதிவு செய்ய முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.கர்நாடக நீதிமன்றத்தின் தீர்ப்பு போன்ற காரணங்களை தெரிவித்து திருமணம் பதிவு செய்ய மறுக்கின்றனர்.புதுச்சேரியில் உள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் திருமணம் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், காரைக்காலில் மட்டும் பதிய மறுப்பது சரியானது அல்ல. பதிவு செய்யாததற்கான காரணம் குறித்து மக்களுக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் நகராட்சி நிர்வாகம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!