ஆண்டு விழா
கடலுார : கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லுாரி ஆண்டு விழா நடந்தது.கல்லுாரி பொருளியல் துறைத் தலைவர் சாந்தி ராமகிருஷ்ணன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கி, ஆண்டறிக்கை வாசித்தார். கான்ஸ்டன்டைன் ரவீந்தரன் சிறப்புரையாற்றினார். மேயர் சுந்தரி ராஜா, மனித உரிமை அமைப்பு தலைவர் கண்ணன் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லுாரி துாய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் கவுரவிக்கப்பட்டனர்.தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ராஜா, கலை நிகழ்ச்சிகளை கவின் கலை மன்ற பொறுப்பாளர்கள் செல்வக்குமாரி, அருள்ஜோதி செல்வி தொகுத்து வழங்கினர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!