Load Image
dinamalar telegram
Advertisement

வழிகாட்டி பலகைகள் கருப்புமை பூசி அழிப்பு

Tamil News
ADVERTISEMENT


புதுச்சேரி : புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில், சுற்றுலா மையங்களுக்கான வழிகாட்டி பலகையை மர்ம நபர்கள் கருப்பு வர்ணம் பூசி அழித்திருப்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்தியாவின் 'பிரெஞ்சு ஜன்னல்' என அழைக்கப்படும் புதுச்சேரியில் பிரெஞ்சு கால கட்டடங்கள் அதிகம் உள்ளன.



இந்த பிரெஞ்சு கால கட்டடக்கலைகளை காண்பதற்காகவே உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.அவர்களின் வசதிக்காக, சுற்றுலாத்துறை சார்பில், புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் பிரெஞ்சு கால கட்டடங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டு வருகிறது.இந்த வழிகாட்டி பலகைகள் காவி நிறத்தில் உள்ளன. அதில் வீதிகளின் பெயர், அங்கு பார்க்க வேண்டிய இடங்கள் பற்றிய குறிப்புகள் வெள்ளை நிறத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப் பட்டுள்ளன.இவ்வாறு புதுச்சேரி ஆம்பூர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பலகைகளில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இருவர் கருப்பு வர்ணம் பூசி உள்ளனர்.அவர்களிடம், அங்கிருந்தவர்கள் கேட்டபோது, புதுச்சேரி அரசு சார்பில் வழிகாட்டி பலகைகள் கருநீல நிறத்தில் அமைக்கப்பட்டு வந்தது. தற்போது புதுச்சேரியை காவி நிறமாக்க முயற்சி நடக்கிறது அதனைக் கண்டித்து. காவி நிற வழிகாட்டி பலகைகளில் கருப்பு மை பூசுவதாக கூறியுள்ளனர்.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement