dinamalar telegram
Advertisement

மே 15: பெட்ரோல், டீசல் விலையில் 39வது நாளாக மாற்றம் இல்லை

Share
Tamil News

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 39வது நாளாக மாற்றம் இல்லாமல் இன்று (மே 15) ஒரு லிட்டர் பெட்ரோல், 110.85, டீசல் ரூ.100.94க்கு விற்பனையாகிறது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. தமிழகத்தில், 2021 நவ.,3ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 106.66 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனையாகின. இதுவே, பெட்ரோல், டீசல் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது.

அன்றைய தினம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனால், நவ., 4ல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. அன்று தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்; டீசல், 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகின.
பின், உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அம்மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால், நாட்டில் 137 நாட்களுக்கு பின், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து அவற்றின் விலை உயர்ந்து வந்தது.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர்; டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகின. இந்நிலையில் 39 நாட்களாக இன்றும் (மே 15) பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 100.94 ரூபாய் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் நீடித்து வருகிறது.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • suresh - Chennai,இந்தியா

    இதெல்லாம் ஒரு செய்தின்னு போட்டு எரிச்சலை கிளப்பாதீங்க. விலை ஏறினா மட்டும் சொல்லுங்கள். மற்றபடி, தாமாக முன் வந்து இன்னைக்கு பெட்ரோல் விலை ஏறல, இன்னைக்கு பெட்ரோல் விலை ஏறலன்னு அளவுக்கு அதிகமாக கூவ வேண்டாம்.

Advertisement