dinamalar telegram
Advertisement

மின்சாரம் தாக்கிடிரைவர் பலி

Share


சங்கராபுரம், : சங்கராபுரத்தில் மின்சாரம் தாக்கி நெல் அறுவடை இயந்திர டிரைவர் இறந்தார்.கல்வராயன்மலை வெதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் தீர்த்தமலை, 26; நெல் அறுவடை இயந்திர டிரைவர். திருமணமானவர். நேற்று மாலை தீர்த்தமலை நெல் அறுவடை இயந்திரத்தை, பூட்டை ரோடில் உள்ள தனியார் வாட்டர் சர்வீஸ் சென்டரில் வாட்டர் சர்வீஸ் செய்தார். அப்போது, மின்சாரம் தாக்கியது.உடன், சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே தீர்த்தமலை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.சங்கராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement