டிராக்டர் திருட்டு
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே டிராக்டர் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சங்கராபுரம் அடுத்த நெடுமானுரைச் சேர்ந்தவர் கருணாகரன், 44; விவசாயி. இவருக்கு சொந்தமான டிராக்டரை நெடுமானுார் பால் ஸ்டோர் முன் நேற்று முன் தினம் இரவு நிறுத்தி வைத்திருந்தார். நேற்று காலை பார்த்தபோது டிராக்டரை காணவில்லை.புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!