வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
கடலுார், : கடலுார் மாவட்டத்தில் முடியாத வளர்ச்சி பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க, கூடுதல் தலைமை செயலர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.கடலுார் மாவட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை திட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.
அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா கலந்து கொண்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள், குடிநீர் இணைப்பு வழங்குதல், திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் இல்லா தன்மையை உருவாக்குதல் குறித்து அந்தந்த துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, மாவட்டத்தில் முடியாத பணிகளை ஒருமாத காலத்திற்குள் முடிக்க துரிதப்படுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கூடுதல் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!