தந்தை மாயம்: மகன் புகார்
விழுப்புரம் : வளவனுார் அருகே தந்தையை காணவில்லை என மகன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.வளவனுார் அருகே வி.பூதுார் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள்,70; கடந்த ஒரு மாதமாக மனநலம் பாதித்திருந்த இவர், கடந்த 10ம் தேதியில் இருந்து திடீரென காணவில்லை. அவரை குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மகன் புஷ்பராஜ் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!