dinamalar telegram
Advertisement

பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்

Share


திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த ஈ.கீரனூர் கிராமத்தில் நடந்த பொதுவினியோக திட்ட குறைதீர் முகாமில், பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.முகாமிற்கு திட்டக்குடி வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் முருகன் முன்னிலை வகித்தார். ஈ.கீரனூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முகாமில் பங்கேற்று புதிய ரேஷன் அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கல், குடும்ப தலைவர் பெயர்மாற்றம், கடைமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.முகாமில் பெறப்பட்ட 40 மனுக்களில் 39 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. கணினிபிரிவு சத்தியராஜ், வி.ஏ.ஓ.,கல்பனா, கிராம உதவியாளர்கள் கொளஞ்சி, ஆனந்த், ராஜகுமாரி உட்பட பலர் உடனிருந்தனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement