அகதீஸ்வரர் கோவில்திருத்தேர் விழா
திண்டிவனம் : ஒலக்கூர் காமாட்சி அம்மன் சமேத அகதீஸ்வரர் கோவில் திருத்தேர் விழா நடந்தது.கோவிலில், பிரம்மோற்சவ விழா கடந்த 5ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.முக்கிய விழாவான நேற்று தேர் திருவிழா நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 7:00 மணியளவில், அலங்கரிக்கப்பட்ட சுவாமி தேரில் எழுந்தருளச் செய்து, பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!