மின் ஊழியர் மத்திய அமைப்பு; செஞ்சி கோட்ட மாநாடு
செஞ்சி : தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் செஞ்சி கோட்ட மாநாடு செஞ்சியில் நடந்தது.கோட்ட தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் கன்னியப்பன் வரவேற்றார். மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு விழுப்புரம் கிளைத் தலைவர் ஜெயராமன் துவக்க உரை நிகழ்த்தினார். கோட்ட செயலாளர் ஏழுமலை அறிக்கை வாசித்தார்.ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் புருஷோத்தமன், திட்ட செயலாளர் சேகர் மாவட்ட துணைத்தலைவர் சகாதேவன், திட்ட இணைச் செயலாளர் சிவசங்கரன், திட்ட பொருளாளர் அருள், தலைவர் வேல்முருகன் வாழ்த்திப் பேசினர்.மாநில துணைத் தலைவர் அம்பிகாபதி சிறப்புரையாற்றினார். கோட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.மாநாட்டில், 2019ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மின் வாரியம் பொதுத் துறையாக தொடர வேண்டும். புதிய துணை மின் நிலையங்களுக்கு பதவிகளை உடனே அனுமதிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இணைச்செயலாளர் பச்சையப்பன் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!