தீ விபத்து பாதிப்புஎம்.எல்.ஏ., நிவாரணம்
விழுப்புரம் : தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.விழுப்புரம் அடுத்த பெரியகுச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் கல்யாணி வரதராஜ். இவரது கூரை வீடு நேற்று முன்தினம் எரிந்து சேதமடைந்தது. இதையறிந்த, விழுப்புரம் எம்.எல்.ஏ., லட்சுமணன், நேரில் சென்று பார்வையிட்டு கல்யாணி குடும்பத்திற்கு ஆறுதல் கூறி அரிசி, மளிகை பொருள், வேட்டி, சேலை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கினார்.நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, கவுன்சிலர்கள் மணவாளன், புருஷோத்தமன், முன்னாள் ஊராட்சி தலைவர் பால்ராஜ், வார்டு செயலாளர் சண்முகம், நிர்வாகிகள் பழனி, சம்பத், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!