dinamalar telegram
Advertisement

சுடுகாடு பிரச்னை பொதுமக்கள் மறியல்

Share

விழுப்புரம், : வளவனுார் அருகே சுடுகாடுக்கு பாதை கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.வளவனுார் அருகே சிறுவந்தாடு லட்சுமி நகரைச் சேர்ந்த மக்களுக்கான சுடுகாடு கடந்த 6 மாதங்களுக்கு முன் ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தம் என போர்டு வைக்கப்பட்டது.இதையடுத்து ஆயற்குளம் கிராமத்தில் சுடுகாட்டிற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இப்பகுதியை சேர்ந்த மக்கள், சுடுகாட்டு இடம் நீண்ட துாரம் இருப்பதாகவும், பாதை இல்லாததால் உடல்களைக் கொண்டு செல்ல முடியவில்லை எனவும் நேற்று மதியம் 2:20 மணிக்கு, சிறுவந்தாடு - மடுகரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.வளவனுார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து, 2:45 மணிக்கு மறியலை கைவிட்டனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement