அரை கம்பத்தில்தேசிய கொடி
கடலுார் : ஐக்கிய அரபு அதிபர் மறைவையொட்டி, கடலுாரில் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்பட்டது.ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீபா பின் சயத் அல் நகியான் மறைவையொட்டி, இந்தியாவில் நேற்று துக்கம் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி, கடலுார் கலெக்டர், எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் முதுநகர் ரயில் நிலையத்தில் உள்ள நுாறு அடி உயர கம்பத்திலும் தேசியகொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!