விழுப்புரம் - நாகை சாலை பணி தீவிரம்
சிதம்பரம் : விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலையில், கொத்தட்டை அருகே டோல்கேட் அமைக்கும் பணி நடக்கிறது.விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையிலான 194 கி.மீ., துார தேசிய நெடுஞ்சாலை (45 ஏ), நான்கு வழிச்சாலையாக மாற்ற, ரூ. 6,431 கோடி திட்ட மதிப்பீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.விழுப்புரம் ஜானகிபுரத்தில் இருந்து துவங்கி விழுப்புரம், வளவனுார், கண்டமங்கலம், எம்.என்.குப்பம், பாகூர், கடலுார் வெளிப்பகுதி வழியாக சென்று கடலுார் சிப்காட் அருகில் உள்ள குடிகாடு அருகே சிதம்பரம் சாலையில் இணைகிறது.
அங்கிருந்து ஆலப்பாக்கம், பெரியபட்டு, புதுச்சந்திரம், கொத்தட்டை, பி.முட்லுார், சி.முட்லுார் புறவழிச்சாலையில் கீழமூங்கிலடி அருகே வலது பக்கமாக பிரிந்து, பாசிமுத்தான் ஓடையை கடந்து மணலுார் அருகே சீர்காழி செல்லும் புறவழிச்சாலையை அடைகிறது.விழுப்புரம் - நாகை இடையிலான சாலை பணி, விழுப்புரம் - எம்.என்.குப்பம், பங்கூர் - கடலுார் குடிகாடு, குடிகாடு - சிதம்பரம், சிதம்பரம் - சட்டநாதபுரம், சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் என 4 பிரிவுகளாக பிரித்து, பணிகள் நடந்து வருகிறது.கடலுார் குடிகாட்டில் இருந்து சிதம்பரம் வரையிலான 52 கி.மீ., துார சாலை பணிக்காக ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சாலை 45 மீட்டர் அகல சாலையாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது.சாலை விரிவாக்கத்திற்காக சாலையோர பகுதியில் கட்டடங்கள், வணிக வளாகங்கள், கடைகள், வீடுகளை இடித்து அகற்றி, அந்த இடங்களை சமன்படுத்தி சாலை அமைக்கும் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது.கடலுார் சிதம்பரம் இடையிலான நான்குவழி சாலையில், கொத்தட்டை அருகே டோல்கேட் அமைக்கப்பதற்கான பணிகளும் நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலையில், கொத்தட்டை அருகே டோல்கேட் அமைக்கும் பணி நடக்கிறது. அதனால் அதிகமான பேருந்துகள் பரங்கிப்பேட்டை வழியாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.