திருபுவனை : கொத்தபுரிநத்தம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.திருபுவனை அருகே கொத்தபுரிநத்தம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவிலில் 10 நாள் உற்சவம் கடந்த 5ம் தேதி துவங்கியது. தினசரி சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை, சுவாமி வீதி உலா நடைபெற்றது. ஊரணி பொங்கல், சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது . தொடர்ந்து செடல் திருவிழா, தேரில் முத்து மாரியம்மன் வீதியுலா நடந்தது.மாலை 6.00 மணிக்கு கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. காப்புகட்டிய பக்தர்கள் 75 அடி உயரமுள்ள கழு மரத்தில் ஏறினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.
கொத்தபுரிநத்தம் கோவிலில் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!