மண்வள அட்டை பயிற்சி மேளா
வானுார்: வானுார் வட்டார வேளாண்மை துறை சார்பில் தென்சிறுவளூர் கிராமத்தில் மண்வள அட்டை விவசாயிகள் பயிற்சி மேளா மற்றும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட துவக்க விழா நடந்தது.ஒன்றிய சேர்மன் உஷா முரளி தலைமை தாங்கினார். வானுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன், மண்வளம், மண் மாதிரி எடுத்தல், மண் மாதிரியின்படி உரமிடுதல் மற்றும் வேளாண்துறை திட்டங்கள் குறித்து பேசினார்.
விழாவில், நடமாடும் மண் ஆய்வுக் கூடத்தின் மூலம், மண் மற்றும் நீர் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வழங்கப்பட்டது.ஊராட்சி தலைவர் புஷ்பராஜ், ஒன்றிய கவுன்சிலர் முனுசாமி, மாவட்ட கவுன்சிலர் கவுதம், துணை சேர்மன் பருவத கீர்த்தனா விநாயகமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.நிகழ்ச்சியில், வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் கோமதி, வேளாண்மை அலுவலர் முருகன், உதவி விதை அலுவலர் மோகன்குமார், உதவி வேளாண்மை அலுவலர் பஞ்சநாதன், ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் உஷா, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் இளங்கோவன், சதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!