மாவட்ட கிரிக்கெட் போட்டிகடலுாரில் துவங்கியது
கடலுார் : கடலுார் அண்ணா விளையாட்டரங்கில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது.கடலுார் மாவட்ட கிரிக்கெட் அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி, கடலுாரில் நேற்று (14ம் தேதி) துவங்கி 29ம் தேதி வரை நடக்கிறது.நேற்று காலை கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்து துவக்க நிகழ்ச்சியில், மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். செயலாளர் கூத்தரசன் முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.மாவட்ட கிரிக்கெட் சங்க பதிவு பெற்ற கடலுார், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.போட்டிகள் காலை 8:30 மணி, பகல் 12:30 மணி அளவில் தொடங்கி நடக்கிறது. போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படுகிறது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!