தொரவி பள்ளி ஆண்டு விழா
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜெய்சங்கர், தேன்மொழி, அஞ்சலா தேவி முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் செல்லையா வரவேற்றார். உதவி ஆசிரியை நாகராணி ஆண்டறிக்கை வாசித்தார்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டி.இ.ஓ., சுந்தரமூர்த்தி பரிசு வழங்கிப் பேசினார். மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் கல்வி சீர் வரிசையாக பீரோ, டேபிள், சேர் ஆகியவற்றை பள்ளிக்கு வழங்கினர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயச்சந்திரன், ரமேஷ், பள்ளி ஆசிரியர்கள் சண்முகம், ஜீவா, சந்திரா, புஷ்பவள்ளி, புனிதா, பெமினா, அய்யப்பன், சூர்யகலா மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். பட்டதாரி ஆசிரியை அனுஷா நன்றி கூறினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!