கச்சிராயபாளையம் பகுதிகளில்உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையத்தில் ஹோட்டல்களில் உணவுத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.கச்சிராயபாளையம் பகுதியில் செயல்படும் உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அன்புபழனி தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் உணவுப் பொருட்களில் அதிகப்படியான செயற்கை நிறம் சேர்க்கப்பட்டது தெரியவந்தது.தொடர்ந்து அந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் ேஹாட்டல் உரிமையாளர்களிடம் பாதுகாப்பற்ற முறையில் உணவு தயார் செய்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!