சாலைப் பணிகள் துவக்கம்விரைந்து முடிக்க கோரிக்கை
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு - விலங்கல்பட்டு சாலை போடும் பணிகள் துவக்கி, நடந்து வருகிறது.நடுவீரப்பட்டு - விலங்கல்பட்டு சாலையில் வாண்டராசன்குப்பம், வன்னியர்புரம், மூலக்குப்பம், புதுப்பாளையம், சூரியன்பேட்டை, நடுவீரப்பட்டு காலனி ஆகிய கிராமங்கள் உள்ளது.இந்த சாலை குண்டும் குழியுமாக இருந்து வந்தது. இதனால் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர்.
சாலையை சரி செய்திடக் கோரி பொதுமக்கள் பல போராட்டங்கள் நடத்தினர்.இதனால் கடந்த 2020-2021 ஆண்டு பாரத்நிர்மான் கட்டம்-3ல் பாரத பிரதமர் சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 4 கோடியே 50 லட்சம் மதிப்பில் சாலைகள் சரி செய்திடும் பணிகள் கடந்த ஆண்டு துவங்கியது.ஆனால் பணிகள் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக வாண்டராசன்குப்பம் பகுதியில் சாலை போடும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. சாலை பணியால் கடந்த 15 மாதங்களாக இந்த வழியாக பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, சாலை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!