ஊராட்சி தலைவர்களுக்கு மங்களூரில் கருத்தரங்கு
சிறுபாக்கம் : மங்களூர் ஒன்றிய ஊராட்சி தலைவர்களுக்கு பெண் குழந்தைகள் காப்போம் மற்றும் கற்பிப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா தலைமை தாங்கினார். மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் கல்யாணசுந்தரம், துணைச் சேர்மன் கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். நிர்வாக மேலாளர் ராஜாராமன் வரவேற்றார்.வட்டார கல்வி அலுவலர் சக்திவேல், வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர், திட்ட ஒருங்கிணைப்பாளர் முகுந்தன், சமூக பணியாளர் கனிமொழி, திட்ட மேலாளர் சக்திவேல், ஊராட்சி தலைவர் ராமு, தேவராஜ், மஞ்சாயி பரமசிவம், சுப்ரமணியன், கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமையியல் துறை சார்பில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வியின் முக்கியத்துவம், பெண் குழந்தைகளை வளர்க்கும் முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!