dinamalar telegram
Advertisement

டெங்கு காய்ச்சல் முன்தடுப்பு முகாம்

Share


பெண்ணாடம், : பெண்ணாடம் அடுத்த இறையூர் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் முன்தடுப்பு முகாம் நடந்தது.தொளார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த முகாமிற்கு, ஊராட்சி தலைவர் சுதா ரத்தினசபாபதி தலைமை தாங்கினார்.மாவட்ட பூச்சியல் வல்லுனர் ராஜசேகர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் விஜயரங்கன், ரமேஷ், விக்னேஷ், சரண்ராஜ் மற்றும் தற்காலிக கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் வைத்திருக்க அறிவுறுத்தினர். பின்னர், கிராம மக்களுக்கு கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் பரவும் விதம், தடுக்கும் வழிமுறைகள் குறித்து சுகாதார கல்வி வழங்கப்பட்டது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement