அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்மயிலம் அருகே பரபரப்பு
மயிலம் : மயிலத்தில் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கூட்டேரிப்பட்டில் நடந்தது.சசிகலா அணியைச் சேர்ந்தவர் நிர்வாகி கே.சேகர் என்பவரின் இல்ல திருமண விழா மயிலத்தில் இன்று 15ம் தேதி நடக்கிறது. இதற்காக கூட்டேரிப்பட்டில் இருந்து மயிலம் வரை அ.தி.மு.க., கொடி மற்றும் பேனர் கட்டப்பட்டிருந்தது.அ.தி.மு.க., கொடி மற்றும் பேனர் கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலம் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் டி.டி.சேகரன் தலைமையில் கூட்டேரிப்பட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அங்கிருந்த கட்சிக்கு கொடிகளை பிடுங்கி எறிந்தனர். சேகர் ஆதரவாளர்கள் மீண்டும் கொடியை நட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!