பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ; கூடுதல் தலைமைச் செயலர் ஆய்வு
திண்டிவனம் : திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஆய்வு செய்தார்.திண்டிவனத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வாரியம் மூலம், திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகளை, நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, கலெக்டர் மோகன் முன்னிலையில் நேற்று ஆய்வு செய்தார்.சலவாதி சாலையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டார்.தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், 268 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும், பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.பின், கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள தீர்த்தக்குளம் மற்றும் பஜனை கோவில் தெருவில் நடக்கும் பாதாள சாக்கடைகளுக்கான குழாய்கள் இணைக்கும் பணிகளையும் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.சப் கலெக்டர் அமீத், தமிழ்நாடு குடிநீர் தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன், மேற்பார்வை பொறியாளர்கள் பழனிவேல், விஜயன், சுற்றுச்சூழல் கண்காணிப்பு அலுவலர் வைத்தீஸ்வரன், நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குனர் குபேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சங்கர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அன்பழகன், திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா, கமிஷனர் (பொறுப்பு) தனபாண்டியன் உடனிருந்தனர்,
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!