வயல்வெளி சாலையில் பாலம் அமைக்கும் பணி
வில்லியனுார் : வயல்வெளி சாலையில் இரு இடங்களில் புதிய பாலம் அமைக்கும் பணியை எதிர்க்கட்சி தலைவர் சிவா துவக்கி வைத்தார்.ஒதியம்பட்டு மாதா கோவில் முதல் அரும்பார்த்தபுரம் வரை செல்லும் வயல்வெளி சாலை ரூ. 1:83 கோடி செலவில் தார் சாலையாக அமைக்கும் பணி கடந்த ஜன., துவங்கி, தற்போது முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.இந்த சாலையின் இரு இடங்களில் மழைநீர் வடிக்கால் வசதிக்காக ரூ.18 லட்சம் செலவில் புதிய பாலம் அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் சிவா நேற்று பூமி பூஜை செய்து பணியை துவக்கிவைத்தார்.பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஏழுமலை, உதவிப்பொறியாளர் பாரத்தசாரதி, இளநிலைப் பொறியாளர் முருகன், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!