கருவூலத்துறை ஆணையர்விழுப்புரத்தில் ஆய்வுக்கூட்டம்
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட கருவூலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, கலெக்டர் மோகன் முன்னிலை வகித்தார். கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் வெங்கடேஷ் தலைமை தாங்கி ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருவூலத்துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் அரசு துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கும் முறை மற்றும் இதர பணபரிவர்த்தனை கணினி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆய்வு செய்தார்.ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்நாள் நிலுவை ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், கூடுதல் ஓய்வூதியம் பண பரிவர்த்தனை குறித்து ஆலோசிக்கப்பட்டது. சிறந்த முறையில் பணியாற்ற அலுவலர்களுக்கு ஆணையர் அறிவுரை வழங்கினார்.எஸ்.பி., ஸ்ரீநாதா, டி.ஆர்.ஓ., ராஜசேகரன், கருவூல மண்டல இணை இயக்குனர் முத்துராமன், மாவட்ட கருவூல அலுவலர்கள் சித்ரா, இளங்கோபிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!