dinamalar telegram
Advertisement

பசுமை விருந்து படைக்கும் வனம்; பரவசத்தில் பக்த மனம்

Share
சென்னிமலை,-சென்னிமலை மலை மீதுள் முருகன் கோவில், கொளுத்தும் கோடை வெயிலிலும், பச்சைப் பசேலென ஜொலித்து, கண் களுக்கு பசுமை விருந்து படைக்கிறது. சென்னிமலை வனப்பகுதி, 1,400 ஏக்கர் பரப்பரவு கொண்டது. முற்றிலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மார்ச் மாதமே தொடங்கிய வெயில் தாக்கத்தால், மலை பகுதியில் மரங்கள் இலைகளை உதிர்த்து வறண்டன. இதனால் சென்னிமலை சுப்ரமணிய சுவாமி வீற்றிக்கும் மலைப்பகுதி, பாறை களாக காட்சியளித்தது.கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்வதால், சென்னிமலை வனப்பகுதி மெல்ல மெல்ல பசுமைக்கு திரும்பியது. மரம், செடி, கொடிகள் நன்கு துளிர் விட்டு செழித்து வளர்ந்துள்ளதால், தற்போது பச்சை பசேலென மலை ஜொலிக்கிறது. சென்னிமலை முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள், மலையின் அழகையும் கூடுதலாக கண்டு ரசித்து செல்கின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement