விபத்தில் சிக்கிய அப்பாச்சி 19 வயது தொழிலாளி பலி
பவானிசாகர்,-பவானிசாகர் அருகே அதிவேகமாக சென்ற டூவீலர், பாலத்தின் மீது மோதியதில், கட்டட தொழிலாளி பலியானார். ஒருவர் படுகாயம் அடைந்தார்.பவானிசாகரை அடுத்த புங்கார் காலனியை சேர்ந்தவர் கவுரிசங்கர், 19, கட்டட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த நண்பரான ரங்கசாமி, 19, என்பவருடன், கொத்தமங்கலத்துக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். டிபன் வாங்கி கொண்டு புங்கார் காலனிக்கு, அப்பாச்சி பைக்கில் சென்றனர். பைக்கை கவுரிசங்கர் ஓட்டினார்.பவானிசாகர்-பண்ணாரி சாலையில், காமராஜ் நகர் பாலம் அருகே அதிவேகத்தில் சென்ற பைக் பாலத்தில் மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், கவுரிசங்கர் இறந்தார். படுகாயமடைந்த ரங்கசாமி சிகிச்சை பெற்று வருகிறார். பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!