dinamalar telegram
Advertisement

சிலவரி செய்திகள்: ஈரோடு.....

Share
சென்னிமலைக்கு வந்தகாங்., பாத யாத்திரைசென்னிமலை: மத்திய அரசை கண்டித்து, ஈரோடு தெற்கு மாவட்ட காங்., சார்பில், தலைவர் மக்கள் ராஜன் தலைமையில், பாத யாத்திரை நடத்தி வருகின்றனர். பாத யாத்திரை சென்னிமலைக்கு நேற்று வந்தது. குமரன் சதுக்கத்தில் ஈரோடு எம்.பி., கணேச மூர்த்தி, காங்., நிர்வாகிகள் வரவேற்றனர். குமரன் சிலைக்கு மாலை அணிவித்து, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த கோரி மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், எம்.பி., கணேசமூர்த்தி பேசினர். பனியம்பள்ளி, வரப்பாளையம் வாய்ப்பாடி ஊராட்சி வழியாக ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு பாதயாத்திரை சென்றது.பேரூராட்சி ஊழியர் சங்கமாவட்ட பேரவை கூட்டம்கோபி: தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம், ஈரோடு மாவட்டம் சார்பில், மாவட்ட பேரவை கூட்டம், நம்பியூரில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். டவுன் பஞ்., பணியாளர்களுக்கு கிரேடு பே 1,900 ரூபாய் வழங்க வேண்டும். கீழ்நிலை பணியாளர்களுக்கான, 20 சதவீத அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். முன்களப்பணியாளர் மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு, கொரோனா கால ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பத்தாண்டுகளுக்கு மேல், ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, கலந்தாய்வு அடிப்படையில், பணி மாறுதல் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றினர்.ஊடுபயிராக கஞ்சாபயிரிட்டவர் கைதுகோபி: கோபி அருகே காசியூர் பகுதியில், கஞ்சா சாகுபடி செய்திருப்பதாக, கடத்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அளுக்குளி பகுதியில் ரோந்து சென்றபோது, வேலுச்சாமி என்பவர், மாட்டுத்தீவனமாக மசால் புல்லுடன், ஊடுபயிராக, 33 கஞ்சா செடிகளை பயிரிட்டிருந்தார். அவரை கைது செய்து, கஞ்சா செடிகளை பறித்து அழித்தனர்.பாசன சபை சார்பில்பொதுக்குழு கூட்டம்கோபி: யு7 கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபை, பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார். கீழ்பவானி வாய்க்காலில், கான்கிரீட் திட்டத்தை கைவிட்டு, வாய்க்காலை துார்வாரி, மண் கரையை பலப்படுத்த வேண்டும். பாண்டியாறு, மோயாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வாழை போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு, தனி நபர் பயிர் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கூட்டத்தில், நிர்வாகிகள் பேசினர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement