நீச்சல் குளத்தில் குளிக்க ஆன்லைன் பேமென்ட்
தர்மபுரி,-''தர்மபுரி, அரசு ராஜாஜி நீச்சல் குளத்தில் குளிக்க, ஆன்லைன், 'பேமென்ட்' மட்டுமே செய்ய வேண்டும்,'' என, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி கூறினார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது: தர்மபுரி, அரசு ராஜாஜி நீச்சல் குளத்தில், தர்மபுரியை சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என, ஏராளமானோர் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். சிலர் நீச்சல் பழக இங்கு வந்து செல்கின்றனர். இதையடுத்து, குளிக்க வரும் நபர்களிடம் ஒருமணி நேரத்துக்கு, 50 ரூபாய் கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி.,யுடன், 59 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. பணம் வசூலித்தல் மற்றும் சில்லரை வழங்குவதில் ஏற்பட்ட சிக்கலால், தற்போது பணம் வசூலிப்பது ஆன்லைன் மூலம் மாற்றப்பட்டுள்ளது. எனவே, நீச்சல் குளத்தில் குளிக்க வரும் நபர்கள், கட்டாயம் ஆன்லைன், 'பேமென்ட்' செய்ய டெபிடிட், கிரடிட், யு.பி.ஐ., உள்ளிட்ட வசதிகளுடன் கொண்ட மொபைல் எண் எடுத்து வர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!