மாதாந்திர குற்ற தடுப்பு கலந்தாய்வு கூட்டம்
தர்மபுரி,-தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று, மாதந்திர குற்ற தடுப்பு கலந்தாய்வு கூட்டம் எஸ்.பி., கலைச்செல்வன் தலைமையில் நடந்தது.
மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, எஸ்.பி., கலைச்செல்வன் அறிவுறுத்தினார். முன்னதாக, மாவட்டத்தில் உள்ள போலீசார் பயன்படுத்தும் காவல் வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என, மாதாந்திர வாகன ஆய்வு மேற்கொண்டார்.
இதில் கூடுதல் எஸ்.பி.,க்கள் அண்ணாமலை, குணசேகரன், புஷ்பராஜ் மற்றும் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!