விதிமுறை மீறிய வாகனங்கள் ரூ. 1.30 லட்சம் அபராதம் விதிப்பு
கிருஷ்ணகிரி,-கிருஷ்ணகிரியில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் இயக்கிய, 27 வாகனங்களுக்கு, 1.30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் குழுவினர், கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாகனங்களில் கூடுதல் முகப்பு விளக்குகள், கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர், பம்பர் பொருத்தப்பட்டிருப்பது, 'G' அல்லது 'அ' என எழுதப்பட்டிருப்பது உள்ளிட்ட விதிகளை மீறிய, 27 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, 1.30 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என, கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் சாமி தெரிவித்தார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!