dinamalar telegram
Advertisement

சிலவரி செய்திகள்: தர்மபுரி...

Share
வி.ஏ.ஓ.,க்களுக்கு புத்தாக்க பயிற்சிபாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வருவாய் உட்கோட்டத்திற்குட்பட்ட புலிக்கரை, பாலக்கோடு, வெள்ளி சந்தை, மாரண்டஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 33 வி.ஏ.ஓ.,க்களுக்கு தாசில்தார் அலுவலகத்தில், 7 நாள் புத்தாக்க பயிற்சி நேற்று துவங்கியது. தாசில்தார் ராஜசேகரன் விளக்கம் அளித்தார். மேலும் பட்டா, உட்பிரிவு போன்றவற்றை காலதாமதமின்றி உடனடியாக செய்து தர ஆலோசனை வழங்கினார்.காரிமங்கலம் கல்லுாரி ஆண்டு விழாகாரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆண்டுவிழா முதல்வர் கீதா தலைமையில் நடந்தது. பாலக்கோடு அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,அன்பழகன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தி.மு.க.,-எம்.பி.,செந்தில்குமார் பேசினார். விழாவில் கல்லூரி மாணவியரின் கலைநிகழ்சி நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. காரிமங்கலம் டவுன் பஞ்.,தலைவர் மனோரகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.கழிவுநீர் கால்வாய்தலைவருக்கு பாராட்டுகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரிஅடுத்த உத்தனப்பள்ளி பஞ்.,ல், போதிய கழிவுநீர் கால்வாய்கள் இன்றி மழை நாட்களில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். உத்தனப்பள்ளி பஞ்.,ன் நீண்ட நாள் கோரிக்கையான கழிவுநீர் கால்வாய் அமைக்க பஞ்., தலைவருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பஞ்., தலைவர் லட்சுமிகாந்த், தன் சொந்த செலவில் கழிவுநீர் கால்வாய் கட்டி தருவதாக கூறி பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.அ.ம.மு.க.,வினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்காரிமங்கலம்: தர்மபுரி மாவட்ட அ.ம.மு.க., மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விக்னேஷ், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் ராஜா உள்ளிட்டோர் தலைமையில், 50க்கும் மேற்பட்ட, அ.ம.மு.க.,வினர் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர், அன்பழகன் முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.சமூக நீதி கூட்டமைப்பு சங்க கூட்டம்ஓசூர்: ஓசூரில், சமூக நீதி கூட்டமைப்பு சங்க கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராமசாமி தலைமை வகித்தார். மதுரையில வரும் ஆக.,7ம் தேதி நடக்கும் சமூக நீதி மாநாட்டில் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொள்ளவேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. மத்திய அரசு, சென்செக்ஸ் கணக்கெடுப்பிலேயே, ஓ.பி.சி., ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், மாநில அரசு, இடஒதுக்கீடு சட்டத்தை பாதுகாக்கும் வகையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சீர்மரபினர் நல சங்க கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் ஜெயவீரன், செயலாளர் பாபு, காளிமுத்து,போயர் முன்னேற்ற சங்க தலைவர் சென்னகிருஷ்ணன், குமார், குரும்ப கவுண்டர் சமுதாய மக்கள் சமூக நீதிப் பேரவை மாநில செயலாளர் கோவிந்தன், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஒருங்கிணைந்த துப்புரவு முகாம்தர்மபுரி: தர்மபுரி நகராட்சியில் நேற்று, ஒருங்கிணைந்த துப்பரவு முகாம், சேர்மன் லட்சுமி மாது தலைமையில் நடந்தது. தர்மபுரி பஸ்ஸ்டாண்ட், ராஜகோபால் கவுண்டர் பூங்கா, எஸ்.வி., ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்கள் துார் வாரும் பணி, குப்பை அகற்றும் பணி நடந்தது.நகராட்சி கமிஷனர் சித்ரா, துணைத்தலைவர் நித்யா அன்பழகன், கவுன்சிலர்கள் தனலட்சுமி சுரேஷ், செந்தில்வேல் உட்பட, பலர் பங்கேற்றனர். இதே போல், பென்னாகரம், பாலக்கோடு, அரூர், கடத்துார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை டவுன் பஞ்சாயத்திலும் ஒருங்கிணைந்த துப்புரவு பணி முகாம் நடந்தது.தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம்பர்கூர் : பர்கூர் அடுத்த பெருகோபனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிலைய அலுவலர் தர்மலிங்கம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் திடீரென தீப்பிடித்தால், தீயை எப்படி அணைப்பது, நோயாளிகளை எப்படி உடனடியாக காப்பாற்றுவது என்பது குறித்தும், தீயணைப்பு கருவிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர். டாக்டர் நிஷானா, செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.விவசாய தொழிலாளர் சங்கமாவட்டக் குழு கூட்டம்தர்மபுரி: 'தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க, தர்மபுரி மாவட்டக்குழு கூட்டம் இன்று நடக்கவுள்ளது' என, இச்சங்க மாவட்ட செயலாளர் பிரதாபன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட, லளிகத்தில் உள்ள தியாகி பச்சாகவுண்டர் நினைவு இல்லத்தில் நடக்கும் கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் மாதையன் தலைமை வகிக்க உள்ளார். விவசாய தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், சங்கத்தின், 2022 ம் ஆண்டு உறுப்பினர் புதுபித்தல் மற்றும் சேர்க்கை நடக்கவுள்ளது. தொடர்ந்து, இந்த இயக்கம் நடந்துவது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது' என, கூறியுள்ளார்.கழிவுநீர் கால்வாய் பணிக்கு பூமிபூஜைதர்மபுரி: தர்மபுரி, உங்காரனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது ஏமக்குட்டியூர். இப்பகுதியில், போதிய கழிவுநீர் கால்வாய் இல்லாமலிருந்தது. இங்கு, புதியதாக சாக்கடை கால்வாய் அமைக்க, பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கையை ஏற்று, எம்.எல்.ஏ., பொதுநிதியிலிருந்து நேற்று, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை, பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., கோவிந்தசாமி பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். ஒன்றிய குழு தலைவர் செல்வம், தர்மபுரி பி.டி.ஓ.,க்கள் தனபால் மற்றும் கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.சமத்துவபுரம் மறு சீரமைப்பு பணிஓசூர்: ஓசூர் அடுத்த நல்லூர் பஞ்.,ல் அமைந்துள்ள சமத்துவபுரத்தில், 63 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடுகள், சமுதாய கூடம், நூலகம், நுழைவு வாயில் அமைப்பது உள்ளிட்ட மறுசீரமைப்பு பணிகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளரும், ஒசூர் எம்.எல்.ஏ.,வுமான பிரகாஷ் நேற்று துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர்கள் சின்னபில்லப்பா, நாகேஷ், வெங்கடேஷ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சீனிவாசன், பஞ்., தலைவர் வீரபத்திரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement