மதுக்கடையில் துளையிட்டு திருட முயன்றவர் சிக்கினார்
சேலம்-டாஸ்மாக் கடையில் துளையிட்டு, மதுபாட்டில்களை திருட முயன்ற வரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், மூன்று ரோடு, ஜவஹர் மில் அருகே, இரு டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. அங்கு, நேற்று முன்தினம் இரவு, கடையை விற்பனையாளர்கள் பூட்டிச்சென்றனர். இந்நிலையில், அங்கு வந்த, வீரபாண்டி, பைரோஜியை சேர்ந்த மோகன், 29, டாஸ்மாக் கடை சுவரின் அடிப்பகுதியில், ஒரு ஆள் செல்லும் அளவுக்கு துளையிட்டார்.
அந்த வழியாக உள்ளே சென்று, நேற்று காலை, 2:00 மணிக்கு, மதுபாட்டில்களை எடுத்துக்கொண்டிருந்தார். இதை, அங்கு நின்றிருந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பார்த்து, பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து, மோகனை கைது செய்தனர். விசாரணையில், இரு கடையில் திருட முயன்றதும், துளையிட்ட ஒரு கடையில் சுவரில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பெட்டிகள் சரிந்ததில், 13 ஆயிரத்து, 800 ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைந்ததும் தெரிந்தது.
அத்துடன், இரு கடைகளில் இருந்த, 15 ஆயிரத்து, 600 ரூபாய் தப்பியது. இச்சம்பவத்தில் மோகனுடன் சேர்ந்து யாரேனும் ஈடுபட்டனரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!